Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி மேல அப்படி என்ன கோபம் கம்பீருக்கு”….? கம்பீர் சொன்ன சிஎஸ்கே வீரர்கள் லிஸ்ட் …..!!!

ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது .

15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை  தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி யாரை தக்கவைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிஎஸ்கே அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

இதில் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண், ஆகியோரை அணியில்  தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வரிசையில் சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதேசமயம் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் கௌதம் கம்பீர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இந்த கருத்து தோனியின் மீதான அவருடைய வன்மத்தின்  வெளிப்பாடாக உள்ளது என ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |