உலகில் எங்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன் என தோனியின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தோனியின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். பாகிஸ்தானின் கராச்சி பகுதியை சேர்ந்த இவர். சிகாகோவில் வசித்து வருகிறார்.
தோனி இல்லாததால் இனி உலகில் எங்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அங்கு பஷீர் கண்டிப்பாக இருப்பார். தற்போது தோனியின் ஓய்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய பஷர் “தோனி இல்லாததால் இனி உலகில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நான் செல்ல மாட்டேன். ஒவ்வொரு வீரரின் பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வரும். ஆனால் தோனியின் ஓய்வு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான போட்டியில் அவருக்கு ஓய்வு அளித்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு முடிந்தபின்பு நிச்சயமாக ராஞ்சியில் தோனியை சந்திப்பேன்.” என்று அவர் கூறியுள்ளார்.