Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி சொன்ன அட்வைஸ்”…. “எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு”…! மனம் திறந்த ரஷித் கான்…!!!

 விராட் கோலி , தோனியை குறித்து ஆப்கானிஸ்தான் வீரர்  ரஷித் கான் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான  ரஷித் கான் யூடியூப் சேனல்  ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ” போட்டியில் பேட்ஸ்மேனுக்கு நன்றாக  பந்து வீசி, நெருக்கடி கொடுக்கும் போது, அவர்கள் தனக்கு சம்பந்தமில்லாத ஷாட்களை அடித்து ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் . தனது வழக்கமான பாணியை மட்டும் ஆட்டத்தில் அவர் வெளிப்படுத்தி ஆடுவார் . தனது பாணியில் இருந்து விலகாமல் ஆட்டத்தை  வெளிப்படுத்துவதுதான் , அவருடைய மிகச் சிறந்த வெற்றிகரமான  செயல்பாட்டுக்கு காரணம் என்று நினைக்கிறேன். விராட் கோலி நல்ல தன்னம்பிக்கை கொண்டவர் ” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,” ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும், என்பது என்னுடைய கனவாகும். பந்துவீச்சாளர்களுக்கு தோனி சிறப்பான ஆலோசனையை வழங்குவார். கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி, முடித்தவுடன் என்னிடம் தோனி பேசும்போது, பீல்டிங் செய்யும்போது, ஆக்ரோஷத்தை குறைத்துகொண்டு  கவனமுடன் செயல்பட வேண்டும்.  ஆக்ரோஷத்துடன் செயல்பட்டால், பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்” இவ்வாறு ரஷித் கான் கூறினார்.

 

Categories

Tech |