Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் மீது இன்னுமா கோபம்? சேவாக்கின் அதிரடி பேச்சு…!

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நிகழ்ந்த சம்பவங்களை இன்னும் வீரேந்திர சேவாக் மறக்கவே இல்லை.சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களான தங்களை தோனி பெஞ்சில் உட்கார வைப்பார் என்று அவர் நிச்சயம் நினைத்து இருக்கவே மாட்டார். ஆனால் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் சேவாக் அதை நினைவு கூறுகிறார் என்றால் அது அவருடைய மனதில் தீராத வடுவாக இன்றளவும் உள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது.

அப்படி என்னதான் சொன்னார்

ஆஸ்திரேலிய தொடரின் போது என்னதான் நடந்தது ?  இந்திய அணியின் கேப்டனாகவும் , அதிரடி ஆட்டக்காரராகவும் , சிறந்த விக்கெட் கீப்பராகவும்  கொடிகட்டிப் பறந்தவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றார்.

Image result for dhoni"

இருப்பினும் தோனியின்  ஓய்வு காலம் கிட்டத்தட்ட நெருங்கி விட்டதால் , அவருக்கு பிறகு வலிமையான விக்கெட் கீப்பரை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு இந்திய அணியின் கைகளில் உள்ளது. அதனால் தோனிக்கு பிறகு ரஷப் பண்ட்டை உருவாக்க திட்டமிட்ட இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வந்தது. அதற்கேற்ப உலக கோப்பை அரையிறுதிக்குப்பின் இந்திய அணியில் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்படாமலே இருந்து வருகின்றது .

Image result for rishabh pant"

இது ஒருபுறமிருக்க தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரு விக்கெட் கீப்பராகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ ரஷப் பண்ட் தன்னுடைய திறமையை இன்னும் முழுமையாக நிரூபிக்கவில்லை. குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ரஷப் பண்ட் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் விளையாடினார். அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

Image result for kl rahul"

அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான T 20 தொடரிலும் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். ராகுல் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரஷப் பண்ட் அடுத்து எப்போது விளையாடுவார் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படாமலே உள்ளது. இத்தகைய சூழலில்தான் விஷயங்களை ரஷப் பண்ட்_தின் நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image result for SEHWAG"

நேரடியாக அவர் ரஷப் பண்ட் பற்றி மட்டும் பேசி இருந்தால் அது சாதாரணமாக முடிந்திருக்கும். ஆனால் வம்புக்காக தோனியில் பேசியிருக்கிறார் சேவாக். அதாவது சச்சின் , கம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் தற்போது ரஷப் பண்ட்_டை நடத்தக் கூடாது என்று சேவாக் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய சேவாக் , ரஷப் பண்ட் அணியில் இல்லை என்றால் எப்படி அவர் ரன்களை அடிப்பார் என்றும் , சச்சின் டெண்டுல்கரை ஆனாலும் பெஞ்சில் உட்கார வைத்தால் ரன் அடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் மேட்ச் வின்னராக இருப்பார் என்றால் ஏன் விளையாட வைக்கவில்லை என்று ரஷப் பண்ட்_டிற்கு ஆதரவாக பேச தொடங்கிய சேவாக் பின்னர் தோனியின் பக்கம் காட்டமாக சென்று இருக்கின்றார்.

Image result for SEHWAG GAMBIR SACHIN"

ரஷப் பண்ட் என்ன காரணத்திற்காக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை சொல்வதற்காக வந்த செய்வார் 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது சச்சின் கம்பீர் மற்றும் தன்னையும் கேப்டனாக இருந்த தோனி பெஞ்சில் உட்கார வைத்த பழைய கதைக்கு சென்றுவிட்டார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது டாப் 3 வீரர்களான சச்சின் , கம்பீர் மற்றும் தன்னை மிகவும் மந்தமாக பில்டிங்  செய்வதாக தோனி மீடியாவில் தெரிவித்தார் என்றும் , ஆனால் அது குறித்து தங்களிடம் கேட்டதுமில்லை , கலந்து பேசியதும் இல்லை என்றும் , மீடியாவில் அவர் பேசிய பிறகுதான் தங்களுக்கே அந்த விஷயம் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

Image result for dhoni press conference"

இது மட்டுமல்லாமல் கலந்துரையாடலின்போது ரோகித் சர்மாவை விளையாட வைக்க வேண்டும் என்பதால் மூவரும் மாற்றி மாற்றி களமிறக்க படுவார்கள் என்று கூறிய தோனி மீடியாவில் நாங்கள் மந்தமாக பில்டிங் செய்வதுதான் வீரர்கள் மாற்றி மாற்றி களமிறங்கப்படுவதற்கான காரணம் என்று கூறினார்.

இது மட்டுமல்லாமல் அன்று தோனி தங்களிடம் நடந்து கொண்டது போல் , இன்று ரஷப் பண்ட்_டிடம் அணி நிர்வாகம் நடந்து கொண்டிருந்தால் அது தவறு என்று கேட்டுக் கொண்ட சேவாக் , தங்களுடைய காலத்தில் கேப்டன் வீரர்களுடன் சென்று கலந்து பேசுவார் என்றும் , தற்போது விராட் கோலி அப்படி செய்கிறாரா ?  இல்லையா ? என்பது தனக்கு தெரியவில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image result for ROHITHSARMA CAPTAN"

ஆசியா கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக சென்ற போது அவர் அனைத்து வீரர்களுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் , அதே போல் அணி நிர்வாகம் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தோனி மீது சேவாக் இவ்வளவு காட்டமாக பேசும் அளவிற்கு 2012 ல் என்ன நடந்தது என்றால் மூத்த வீரர்களான சச்சின் , சேவாக் , கம்பீர் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருந்தனர். இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் அன்று இந்த விஷயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படி அன்று தன்னை பெஞ்சில் உட்கார வைத்ததற்காக தோனியை இன்று சாடியிருக்கிறார் சேவாக்

Categories

Tech |