ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் மகேந்திர சிங் தோனி லடாக்கில் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார்.
38 வயதான கிரிக்கெட் வீரர் தோனிக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. பேராஷூட் ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்து தோணி பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ நகர் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் காவல் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோணி தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ராணுவ சீருடையில் லடாக் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற தோனி ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டால் அவர்களுடன் சிறிது நேரம் கலந்து உரையாடி விட்டு தோனி புறப்பட்டார். சியாச்சின் செல்லும் தோனி அங்கு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.