Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

தொப்பியை இப்படி தான் அணிய வேண்டும்…. பிராவோவுக்கு பாடம் நடத்திய தோனி மகள் – வைரல் வீடியோ…!!

சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது 

தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா  எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம்  தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில்  தோனியின் மகளான ஸிவா  கூறியது மற்றும்  மைதானத்தில் தோனி விளையாடி கொண்டிருக்கும் போது அவரை உற்சாகப்படுத்தும் விதமாக எழுந்து நின்று அப்பா அப்பா என்று அழைத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று  மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதியது. இப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரி வெற்றியை ருசித்தது. போட்டி முடிந்த பின்னர் மைதானத்துக்கு வெளியே சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ ஸிவாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிராவோ தொப்பியை மாற்றி அணிய, ஸிவா தொப்பியை எவ்வாறு அணிய வேண்டும் என்று பிராவோவுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பிராவோ உடனே ஸிவாவின் பேச்சைக்கேட்டு நேராக அணிந்து அவரை தூக்கி கொஞ்சினார். இந்த அழகிய காட்சியை படம் பிடித்த தோனி ரசிகர்கள்  சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும்

Categories

Tech |