Categories
கிரிக்கெட் பேட்டி விளையாட்டு

தோனியின் அடுத்த ஆசை….. இனி இதைத்தான் செய்யப்போகிறார்….. நண்பர் கூறிய தகவல்….!!


தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ விரும்புவார்கள். எப்பொழுதும் எதிலும் வித்யாசத்தை முயற்சிக்கும் தோனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற நாளிதழுக்கு தோனியின் நண்பரும், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மிஹிர் திவாகர் பதில் அளித்துள்ளார்.

அவர் “தோனி மிகப்பெரிய விஷயத்தை செய்ய காத்திருக்கிறார். அவருடன் நானும் ஐபிஎல் போட்டிகளுக்கு அமீரகத்தில் இருப்பேன். மேலும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து தோனியிடம் விரிவாக பேச வேண்டும். இயற்கை விவசாயத்தில் அவருக்கு ஆசை இருக்கிறது. ஏற்கனவே இயற்கை உரங்களை அவரது பண்ணை வீட்டில் சோதனை செய்து இருக்கிறார். இதற்காக ‘நியூ குளோபல் ‘ நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவர்கள் தயாரித்த உரத்தை தன் பண்ணை வீட்டில் பயன்படுத்தினார். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. மேலும் ‘நியூ குளோபல் ‘ நிறுவனத்தின் பெருமளவிலான பங்கை  வாங்க தோனி முடிவு செய்துள்ளார். ஐபிஎல் முடிந்ததும் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். இயற்கை உரங்கள் தொடர்பான வணிகத்தை அவர் செய்வார்.” என்று திவாகர் கூறியுள்ளார்.

Categories

Tech |