Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா கொலை வழக்கு.. சார்லஸிடம் மேற்கொண்ட விசாரணை.. முன்னாள் அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானா மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு இளவரசர் சார்லஸ் திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவரான, Lord Stevens கூறியிருக்கிறார்.

மேலும் இளவரசி டயானா, “வாகன விபத்தில் நான் கொலை செய்யப்படலாம்” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் தான் காவல்துறையினர், இளவரசர் சார்லஸிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.

தன் அவ்வாறு வாகன விபத்தில் கொலை செய்யப்பட்டால், இளவரசர் சார்லஸ் Tiggy Legge-Bourkeவை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் Lord Stevens கூறுகையில், இளவரசர் சார்லஸ் சாட்சிக்காக தான் விசாரிக்கப்பட்டுள்ளார். நிச்சயம் குற்றவாளியாக கருதி விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

எனினும் டயானா அப்படி எழுதியதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்று சார்லஸ் கூறியிருக்கிறார். மேலும் இச்சம்பவம் குறித்து முன்னாள் ஊடகவியலாளரான மார்ட்டின் பஷீர் என்பவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பஷீர் நேர்காணல் நடத்திய பின்பே இளவரசி டயானா தான் கொலை செய்யப்படலாம் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |