Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தபேதி, சீதபேதி குணமாக…இந்த மருத்துவத்தை கடைபிடிங்க…!!

வயிற்றுப்போக்கு நிற்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

வயிற்று போக்கிற்கு, மஞ்சளை ஒரு துண்டு எடுத்து தூளாக்கி சூடு பண்ணும் கரண்டியில் போட்டு வறுத்தால் தீ மாதிரி ஆகிவிடும். அதில் அரை தேக்கரண்டி ஓமத்தைப் தூவி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தண்ணீரை ஒரு வேளை கொடுத்தாலே சரியாகிவிடும்.

எளிய உபாயம் மருந்து என்றால், வெறும் கொய்யா இலைகளை மென்று வந்தாலே வயிற்று போக்கிற்கு போதுமானது. வாழைப்பூவை அரைவேக்காடாக சமைத்து சாப்பிட்டால் சீதபேதி நீங்கும்.

மாதுளம் பழத்தோலை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.

மாதுளை பூ, மாங்கொட்டை பருப்பு, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடி செய்து சலித்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நீங்கும். மாதுளம் பருப்பை பொன் வறுவலாக வறுத்து இடித்து தூளாக்கி, அதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து கொடுத்து வந்தால் இரத்தபேதி, சீதபேதி எல்லாம் நின்றுவிடும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் என அனைத்தையும் சம அளவு எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி அதனோடு சரிசமமாக பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவும் அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வில்வம் காய், விதை மற்றும் மலர்கள் வயிற்றுப்போக்கு வயிற்று வலியை நிறுத்துகின்றது.  ஆட்டின் பாலை பருகுவதால் பேதியை நிறுத்துவதுடன் உடலுக்கு நல்ல வலுவையும் கூட்டும்.

Categories

Tech |