Categories
மாநில செய்திகள்

அதிக வட்டி தருவதாக கூறி…. தாய் மற்றும் மகனிடம்…. தனியார் நிதி நிறுவனம் பல லட்சம் மோசடி…!!

மாற்றுத்திறனாளி மகன் மற்றும் தாய் ஆகியோரிடம் தனியார் நிதிநிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டிபுரம் எட்டாமடை பகுதியில் வசிப்பவர் ராஜரத்தினம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ராஜரத்தினம் இறந்துள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி பாக்கியமுத்து கடந்த 2014 ஆம் வருடம் அழகிய பாண்டிபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் முதலீடு செய்ய சென்ற போது அங்குள்ள ஒரு தனியார் நிதிநிறுவன ஊழியர் எங்களுடைய வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். அவருடைய பேச்சை நம்பிய பாக்கியமுத்து ரூ.13,10000 டெபாசிட் செய்துள்ளார். இதேபோல் அவரது மகன் செல்வக்குமார்என்பவரும் 4 தவணைகளாக ரூ.9 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.

டெபாசிட் செய்த பணத்திற்கு உண்டான ரசீதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாண்ட் எதுவும் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது தலைமை அலுவலகத்தில் இருந்து வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை பாண்ட் கொடுக்காததால், அவர்கள் கஸ்டமர் கேரில் ஃபோன் செய்து தகவல் கேட்டுள்ளனர். அப்போது தான் பணத்தை டெபாசிட் செய்யாமல் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் 3 ஊழியர்கள் சேர்ந்து போலி ரசீது கொடுத்து ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியமுத்து, தன்னுடைய மகன்கலான செல்வகுமாரன் மற்றும் மணி ஆகியோருடன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து பாக்கியமுத்து கூறுகையில், “என் மகன் ஒரு மாற்றுத்திறனாளி, என்னுடைய கணவரின் ஓய்வுபெற்ற பணத்தை தனியார் நிதி நிறுவனம் ஏமாற்றிவிட்டது. எனவே தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |