Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீட்டு ஒப்பிட்டுக் டிக் டாக் – மருமகன் கைது

புதுக்கோட்டையில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாகவே டிக் டாக் மூலம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்து சட்டம் முன்பாக மாட்டிக்கொள்ளும் பலரை நாம் பார்த்துள்ளோம். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது இன்னொருவர் மாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு மருமகன் டிக்டாக் செய்துள்ளார். இது அனைவருக்கும் பகிரப்பட நிலையில் காவல்துறையின் கவனத்துக்கு வந்ததை அடுத்து டிக் டாக் வெளியிட்ட நெருஞ்சி பட்டியைச் சேர்ந்த மருமகன் வெற்றிவேல் அதனை வீடியோ எடுத்த நண்பர் மகேந்திரன் கைது செய்யப்பட்டனர். டிக் டாக் மூலமாக பிரபலமாக வேண்டும் என்று பலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையிடம் செமையாக வாங்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |