Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கஞ்சா செடிகளை வளர்த்தது தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்த அருண்குமார் மற்றும், பெரியகுளம் பகுதியை சேர்ந்த மதன்குமார்(23) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து செடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |