தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பாஜக அண்ணாமலை பற்றி ஒரு ட்வீட் பதிவு போட்டிருந்தார். அதில் கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும், இளைஞர் அணியின் தேசிய தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு, அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மன்னிப்பு கடிதம் எழுதுவது பரம்பரை பழக்கம் என்பதால் அன்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எதற்காக ஊடகங்கள் மற்றும் செய்திகளில் வரவில்லை என்று செந்தில் பாலாஜி பதிவிட்டிருந்தார்.
வழக்கமாக செந்தில் பாலாஜி பதிவிடும் ட்வீட் பதிவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த பதிவுக்கு மட்டும் அண்ணாமலை எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக செயற்பாட்டாளரான சத்யபிரபு என்பவர் இதைப் பற்றி பேசி இருப்பது தெரிய வந்தது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டோஷாப் கட்சியின் தலைவர் என்று அண்ணாமலையையும், இளைஞர்களின் தேசிய தலைவர் என்ற தேஜஸ்வி சூர்யாவையும் தான் அப்படி குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை மற்றும் தேஜேஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததற்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியுள்ளதால் அவர் கூறியுள்ளார்.