விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் மைனா நந்தினி கலந்து கொண்ட நிலையில் டயப்பர் போன்ற உடையை அணிந்திருந்தார்.
இந்நிலையில் மைனா நந்தினி டயப்பர் போன்ற உடை அணிந்து இருந்ததால் அவருடைய பின்பகுதியை வைத்து ஒரு youtube சேனல் உருவ கேலி செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் கடுமையான வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் இதன் காரணமாக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பலர் மைனா நந்தினிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்