திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது…. இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்.. தகுதி இல்லை… அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை.
பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே பாதிப்பு இல்லை. அந்த அளவிற்கு ஓராண்டு காலம் பணியாற்றியவர். பிறகு வெள்ளம் வந்தது. வெள்ளம் வந்த போது ஒரு முடிவு எடுத்தார்.
சென்னையில் இனிமேல் வெள்ளம் மக்களை பாதிக்க கூடாது. உடனடியாக திட்டங்களை தீட்டுங்கள் என்று சொல்லி, திட்டங்களை தீட்டி, அவரே தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் சென்று அந்த பணிகளை பார்வையிட்டு நிறைவேற்றினார். அவரோடு கூட காரில் போன வேலை மட்டும் தான் எங்கள் வேலை. அவர் சொன்னது போல்…
சென்னையில் வடக்கு, தெற்கு எல்லாம் எனக்கு தெரியாது. அவர்தான் சுப்பிரமணியம், சேகர் பாபு போன்றவர்கள் இந்த பகுதியை நன்றாக உடனிருந்து செய்தார்கள், வெள்ள தடுப்பு பணிகளை செய்து முடித்தோம். எனவே அண்ணாமலை சொல்கிறார் உங்களுக்கு என்ன தெரியும் என்று? சீனாவில் கொரோனா என்று சொன்னால் சென்னையிலே உடனடியாக கூட்டம் போட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார் தளபதி அவர்கள் என தெரிவித்தார்.