நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை காதலித்ததாக தகவல் பரவி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என கூறலாம்.
மேலும், இவர்களின் பிரிவு குறித்த பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பியதாக தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தற்போது இணையத்தில் தகவல் பரவி வருகிறது.