Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விதிகளை மீறினாரா நயன் ? – விசாரணை…!!

வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  தற்பொழுது திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாகவே ஒருவர் திருமணம் முடித்து விட்டார்கள் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று எடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. ஆனால் இவர்கள் திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் வாடகைத்தாய் மூலமாக பெற்று இருக்கிறார்கள்.எனவே நயன்தாரா குழந்தையை பெற்றது தொடர்பாக டி எம் எஸ் மூலமாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று உறுதி  அளித்துள்ளார்.

Categories

Tech |