ஓயோ ஹோட்டல் நிறுவனத்தின் மீது சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான ஓயோ ஹோட்டல் மீது தற்பொழுது புகார் ஒன்று எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது, பிரபல தனியார் நிறுவனமான ஓயோ ஓட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனத்தின் ஓனர் ரிதேஷ் அகர்வால் உள்பட 2 பேர் மீது, மோசடி மற்றும் சதித்திட்டம் போட்டதாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, விகாஸ் குப்தா என்பவர் கொடுத்துள்ள புகாரில், திருமண நிகழ்ச்சிகளுக்கான ரிசார்ட்ஸ்களை நடத்தி வரும் தனது நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து, உரிய அவகாசம் வழங்காமல் விதிமுறைகளை மீறி வெளியேறி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஓயோ நிறுவனம் தற்பொழுது மறுப்பு தெரிவித்துள்ளது.