பாரதீய ஜனதா கட்சியினால் மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் எதிர்கொள்ள முடியவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசை கவிழ்த்து , தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்து புதிய முதல்வராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. இவர் பொறுப்பேற்று மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் அரசு விழாவாக நடைபெற்று வந்த திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி அம்மாநில அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்த கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ள கருத்தில் , பாரதீய ஜனதா கட்சியினால் மதச்சார்பின்மை கண்ணோட்டத்துடன் எதையும் எதிர்கொள்ள முடியவில்லை. திப்பு சுல்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய மனிதர் என்று கர்நாடக மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். திப்பு சுல்தான் இந்த நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.