Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவர்களும் ஆரம்பிச்சிட்டாங்களா…? கொத்தனாரிடம் வழிப்பறி… மடக்கி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தனாரிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை தெற்கூர் பகுதியில் முருகேசன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பணத்தை பறித்து சென்ற நபர்கள் ராமநாதபுரம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு சென்ற காவல்துறையினர் வாலாந்தரவை சேர்ந்த அஜித்(23), சூர்யா(22) மற்றும் 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |