Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நல்ல படிக்கிற பொண்ணு” பாடம் சொல்லி கொடுத்தது தப்பா…? பேராசிரியரால் மாணவி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

சக மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த மாணவியை பேராசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிப்பவர் செல்வகுமார். இவருக்கு பத்மபிரியா என்ற மகள் உள்ளார். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த பத்மபிரியா 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று மதுரையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக வந்த இவர் தங்கப்பதக்கத்தை வென்று கல்லூரி மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரிக்கு சென்ற பத்மபிரியாவிடம் கணித பாடத்தில் உள்ள சந்தேகங்களை மாணவிகள் கேட்டுள்ளனர்.

அப்போது வகுப்பில் ஆசிரியர் இல்லாத சமயம் என்பதால் பத்மபிரியா மாணவர்களுக்கு போர்டில் எழுதி பாடம் எடுத்துள்ளார். இந்நிலையில் கணித பேராசிரியர் முத்துக்குமார் வகுப்புக்குள் நுழைந்துள்ளார். அப்போது பத்மபிரியா பாடம் எடுத்ததை கண்டு கோபமடைந்த அவர் பாடம் எடுக்கும் அளவிற்கு நீ என்ன பேராசிரியரா? என்று திட்டி மாணவர்கள் முன்பு அவமான படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வகுப்பறைக்கு வெளியே நிற்கச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார்.

இதனால் கண்ணீர் விட்டு அழுத பத்மபிரியாவை சக மாணவிகள் சமாதானபடுத்தி முயற்சித்தனர். ஆனாலும் அவர்களையும் பேராசிரியர் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பத்மபிரியா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தங்கள் மகளின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் முத்துக்குமாரிடம் சென்று பத்மபிரியாவின் பெற்றோர் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது பதட்டமில்லாமல் காணப்பட்ட முத்துக்குமார் உங்களால் என்ன செய்ய முடியும் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முத்துக்குமார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை மகளின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோரும் ஊர் மக்களும் ஊர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மகளின் இறுதிச்சடங்கை நீங்கள் ஒழுங்காக நடத்துங்கள் என்று காவல்துறையினர் கூறியதை அடுத்து பெற்றோர்கள் சடலத்தை பெற்றுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |