தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட தகவல்கள் உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக அர்ஜூன், பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அர்ஜுன் மற்றும் பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் பிரச்சனையால் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அர்ஜுன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் விஷாலின் மேனேஜரை சந்தித்து பேசி இருந்தார். மேலும் நடிகர் விஷால் முதன்முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் வெளியாகவில்லை.