முடியை கலரிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஹேர் கலரிங் என்பது இப்போது ஒரு பேஷனாக மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹேர் கலரிங் செய்து வருகின்றனர். ஹேர் கலரிங் செய்வதை தற்போது வீட்டிலேயே தொடங்கிவிட்டனர். இதில் பலர் செய்யும் தவறு விளம்பரத்தில் இருக்கும் நிறத்தை போல கலர் கிடைக்கும் என நினைப்பது, உண்மையில் முடியின் இயற்கை நிறத்தை பொருத்தே ரிசல்ட் கிடைக்கும். மேலும் கலரை தலையில் அப்ளை செய்யும்போது கவனமாக செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்துத் தடவவும். கலரிங் செய்த பின்னர் முடியை பராமரிப்பது அவசியம்.