பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சதீஷ் அவருடைய நண்பர் ரமேஷ் உடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் போது மசாலா படம் எடுக்கும் சதீஷ் எப்படியைவது ஒரு தயாரிப்பாளரை அணுகி ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
சதீஷின் காதலியான தர்ஷா குப்தாவுக்கு அடிக்கடி பேய் கனவுகள் வர சாமியாரான பாலாவை தர்ஷா குப்தா சந்திக்கிறார். பாலா எப்படியாவது பேயை பிடித்து விட வேண்டும் என்று பூஜைகள் செய்யும்போது சதீஷ் மற்றும் ரமேஷ் அங்கு வந்து பிரச்சனை செய்கிறார்கள். உடனே சன்னிலியோன் பேய் தர்ஷா குப்தாவின் உடம்பில் இறங்கி வருகிறது. சன்னி லியோன் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு பேய் தான் வசித்த அனகொண்டாபுரம் பகுதிக்கு சதீஷ் மற்றும் ரமேஷை அழைத்து செல்கிறது. அங்கிருந்து சதீஷ் மற்றும் ரமேஷ் தப்பித்தார்களா, சதீஷுக்கும் பேய்க்கும் என்ன உறவு என்பதுதான் படத்தின் கதை.
அதன்பிறகு சன்னி லியோன் ராணியாக இருக்கும் போது அவருக்கு ஆண்களை பிடிக்காததால் அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஆண்களையும் அரண்மனைக்கு வரவழைத்து துன்புறுத்துகிறார். இதை பிடிக்காத யோகி பாபு சூழ்ச்சி செய்து சன்னி லியோனை கொன்று விடுகிறார். இதனால் தான் சன்னி லியோன் பேயாக வருகிறார். மேலும் சன்னி லியோன் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இதேபோன்று தர்ஷா குப்தா தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய, சதீஷ் மற்றும் ரமேஷ் வழக்கம்போல் காமெடியில் அசத்தியுள்ளனர். இந்த படத்தில் பேய் பயமோ ஹாரர் திரில்லிங்கோ எதுவும் கிடையாது. இருப்பினும் ஒரு ஜாலியான பேய் கதை போன்று இயக்குனர் ஓமைமை கோஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.