சிலிண்டர் புக் செய்வவதற்கான புதிய முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாகசிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்து தற்போது ரூ.710 க்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இண்டேன் சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டு கால் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சிலிண்டர் புக்கிங் செய்யவும், புதிதாக இணைப்பு பெற விரும்புவோர் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். மேலும் சிலிண்டர் விலை விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https: //iocl. com/ products/IndaneGas. aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.