தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதிமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா ? என்ற கேள்வியை எழுப்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி நாலாயிரத்து கொடுத்துள்ள திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத 14 வகையான மளிகைப் பொருட்களையும் வழங்கி உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் செல்போன் கொடுக்கப்படும் என்று சொன்னீர்களே… ஒருவருக்காவது செல்போன் கொடுத்தீர்களா ? என்று கேள்வி எழுப்பிய மு க ஸ்டாலின், பயிர்க் கடன் – நகை கடன் தள்ளுபடி குறித்த விஷயங்களில் பல முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுககள் குறித்து முழுமையான ஆதாரத்துடன் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளிப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.