பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காதவர்கள் என்ன செய்வதென்று பார்க்கலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடந்தோறும் மூன்று தவணைகளாக பிரித்து ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2019 – 20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதியுடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலங்களில் விவசாயிகளுக்கு விரைவில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
2020 வருடத்திற்கான நிதியுதவியில் ஏப்ரல் மாதத்தில் முதல் தவனையும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது தவணையும், மூன்றாவது தவணை முன்னாள் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 9 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் நிதி உதவியை பிரதமர் மோடி வழங்கினார். இருப்பினும் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அதிகமான விவசாயிகள் பயன்பெற்றனர். ஆனால் ஒவ்வொரு தவணைகளாக வரும்போது பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
மேலும் இன்னும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி பணம் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு, தவறான தகவலை பதிவிட்டது போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல் இருக்கலாம்.
விவரங்களை சரிபார்க்க:
முதலில் http://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும்.
அதில் இந்தியவரைபடம் இருக்கும். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பயனாளிகள் இருக்கிறார்கள்? என்று விவரங்கள் இருக்கும். அவற்றில் எத்தனை பேருக்கு பணம் வழங்கப்பட்டு உள்ளது போன்ற விவரமும் இருக்கும்.
வலது மேல் பக்கத்தில் இருக்கும் Dashboard என்ற பட்டனை அழுத்தினால் மாநிலம், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்கும்.
அதில் உங்களது மாநிலம், மாவட்டம், கிராமம் போன்றவற்றை பதிவு செய்து Show என்ற பட்டனை கிளிக் செய்தால் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Village என்ற ஆப்ஷனுக்கு கீழ் நான்கு பட்டன் இருக்கும். அதில் எந்த எத்தனை பேருக்கு பணம் செலுத்தாமல் நிலுவையில் இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு நிதியுதவி பணம் வரவில்லை என்றால்:
தகுதியுடைய விவசாயிகளுக்கு பணம் வந்து சேரவில்லை என்னும் பட்சத்தில் அரசு ஹெல்ப் லைன் நம்பர்களுக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266.
பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 155261.
பிஎம் கிசான் லேண்ட் லைன்: 011-23381092, 23382401.
பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606.
பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109.
மின்னஞ்சல் முகவரி: [email protected]