இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அரியர் தேர்வு மாணவர்களையும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு யுஜிசி விதிகளுக்கு முரணாக தமிழக அரசு அறிவிக்க முடியாது என்று யுஜிசி கூறி இருந்தார்கள். அந்த நிலைப்பாட்டை மீறி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற ஒரு கருத்து தெரிவிக்கபட்டு இருந்த நிலையில் தற்போது யுஜிசி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பதில் மனுவில், இறுதித் பருவ தேர்வு நடத்த வேண்டியது அவசியமானது என நாங்கள் பலமுறை சுட்டிக் காட்டுகின்றோம்.
அந்த தேர்வை நடத்தாமல் தேர்ச்சி அடைய செய்வது சாத்தியம் இல்லாதது என்றும், இதேபோல் ஏப்ரல் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றைக்கையில் தேர்வுகளை நடத்துவதற்கு கால அவகாசம் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இறுதிப் பருவ தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாகத்தான் ஆரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக நேரடியாக எந்த பதிலையும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் ஆரியர் மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற முடியாது என்ற ஒரு வாய்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது என்பதையும் யுஜிசி பதில் மனுவில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.