அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு முழுதும் நான் சுற்றுப்பயணம் போய்க்கொண்டு தான் இருக்கின்றேன். தினந்தோறும் போய்க் கொண்டு தான் இருக்கின்றேன். நாள்தோறும் போய்க் கொண்டுதான் இருக்கின்றேன். தேர்தல் கிடையாது. தேர்தல் வருகின்ற போது சுற்றுப்பயணம் செய்வோம். இருந்தாலும் நான் தொடர்ந்து எங்களுடைய கலகத்தினுடைய நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
திண்டுக்கல் போயிட்டு வந்தேன், திருச்சிக்கு போயிட்டு வந்தேன், எல்லா பகுதிக்கும் நாங்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என சந்தித்து வருகின்றோம். இப்ப மட்டும் என்ன ? எப்போது அதிமுக இராணுவ கட்டுப்பாடோடு தான் இருக்கு. அண்ணா திமுகவில் பொதுக்குழுவுல பார்த்தீங்கள்ல, எவ்வளவு அழகா, பொதுக்குழு நடத்துணோம். இவ்வளவு பிரச்சனை ஏற்படுத்தினாங்க ? திமுக துணையோடு, திரு ஸ்டாலின் முதலமைச்சர் துணைவோடு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எவ்வளவு முயன்றார்.
ராணுவ கட்டுப்பாட்டோடு 2663 பொது குழு உறுப்பினர்கள் இருக்கிற இடத்தில கிட்டதட்ட 2559 பேர் அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்கள் என்றால் எப்படி என எண்ணிப் பார்க்க வேண்டும். எவ்வளவு அழகா, எவ்வளவு அமைதியா அந்த பொதுக்குழு நடந்தது. இதுதான் முன்னுதாரணம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். ஒரு கட்சியினுடைய திறமை, வலிமை, தொண்டனுடைய எண்ணங்களை பொதுக்குழு மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறோம். இதுதான் ஒற்றுமை, இதுதான் பலம், இதைவிட என்ன பலன் வேணும்னு சொல்றீங்க ? என தெரிவித்தார்.