தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் . இவர் தமிழகத்தில் ஒரு சிறந்த பெண் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து வந்ததோடு பாரதீய ஜனதா கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பலரும் வாழ்த்தினர். தமிழக பாஜக தலைவராக இவர் இருந்த போது இவரின் உருவத்தை கிண்டல் செய்தவர்கள் உட்பட எல்லாருமே தமிழிசையை வாழ்த்தினர்.தமிழகத்தில் இவருக்கு சில அமைப்புகள் பாராட்டு விழா உட்பட நடத்தியது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏற்கனவே மரியாதையை நிமித்தமாக சந்தித்த நிலையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இதில் அவர் பிரதமருக்கு சால்வை அனுவித்து , நினைவு பரிசை வழங்கினார்.