Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் அக்காவை கொன்னுட்டல்ல” நீயும் செத்து போ…. குளித்து கொண்டிருந்தவரை வெட்டிய…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து  அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் வந்துள்ளார்.

ஆனால் ஐயப்பன் மனைவியின் சகோதரர் விஜய் என்பவர், தனது அக்காவை கொன்ற அய்யப்பனை கொல்ல திட்டம் தீட்டியிருந்துள்ளார். இந்நிலையில் எழிலூர் பகுதியில் உள்ள வாய்களில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஐயப்பனை விஜய் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து கொலை செய்த விஜயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |