Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு சொன்னாலும் கேக்கல… கடும் நடவடிக்கை வேண்டும்… டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை தாசில்தார் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மணல் அள்ளியது கீழ்க்குடியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |