நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது.
1947 , ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு விடுதலை கிடைத்தது. அப்புறம் மூணு வருஷம் கழிச்சு தான் நமக்கு சட்டத்திருத்தங்கள் வந்துச்சு அந்த அரசியல் சாசன புத்தகம் ஆரம்பித்த முதல் நாள் தான் அன்று 1950 ஜனவரி 26. அதை தான் நாம குடியரசு தினமாக கொண்டாடுகின்றோம்.
இந்தியாவில் பெரும்பாலும் சுதந்திர தினம் , குடியரசு தினம் இந்த இரண்டுமே வித்தியாசமாக கொண்டாடப்படும். சுதந்திர தின கொடியை பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஏற்றுவார். அதே போல மற்ற மாநிலங்களில் , பிரதமருடைய பிரதிநிதிகளான முதலமைச்சர்கள் எல்லாமே அவர்களுடைய மாநிலத்தில் கொடியை ஏற்றுவார்கள்.
அதே போல குடியரசு தின கொடியை குடியரசுத் தலைவர் தான் டெல்லியில் ஏற்றுவார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் தேசிய கொடியை ஏற்றுவார்கள். அதே போல செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவதை பாரம்பரியமாக வச்சு இருக்காங்கனு பாத்திங்கனா , சுதந்திரம் அடைந்த நாளில் அதாவது ஆகஸ்ட் 15 1,947 அப்போ பிரதமராக இருந்த நேரு செங்கோட்டையில் தான் முதல் முதலாக நம்முடைய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனால் தான் வருஷம் , வருஷம் செங்கோட்டையில் கொடியேற்றி வைக்கின்றார்கள். அதே போல குடியரசு தின விழா தேசிய கொடியை குடியரசுத்தலைவர் டெல்லில் இருக்கின்ற ராஜவீதியில் ஏற்றி வைப்பார்.
இதுதான் டெல்லியிலேயே இருக்கிற பெரிய வீதி. இங்கதான் குடியரசு தினத்தோடு அணிவகுப்பு நடைபெறும். இது சுதந்திர தினத்தை விட மிக பிரம்மாண்டமாக நடக்கும். சுதந்திர தினத்தில் நாம பேசுறது எல்லாமே நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தேசத்தலைவர்களை பற்றி தான்.அதே போல குடியரசுத் தினத்தில் மட்டும் நாம் நம்மை பற்றியும் , நம்முடைய எதிர்காலம் பற்றியும் பேசுவோம். அதாவது நாம் அனைவரும் என்ன பண்ண போறோம் , என்னென்ன மாதிரி இருக்க போறோம் இத பற்றி பேசுவோம்.