அதிகாரி ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே வேப்பிலையை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பயங்கர வேகமெடுத்து பரவி வருகின்றது. மேலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் மக்களிடையே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில் உயர் அதிகாரி ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வேப்பிலையை வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியினை மூடியபடி அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த அதிகாரி மாஸ் போட்டிருந்தாலும் கூடுதல் பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.