Categories
உலக செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே….? தடுப்பூசி செலுத்த வித்தியாசமான முயற்சி… என்ன செஞ்சாங்க தெரியுமா…?

ஜெர்மனியில் மக்களை அதிகளவில் தடுப்பூசி செலுத்த வைக்க போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் கடுமையான சூழ்நிலை நிலவிய போது அங்கு மாட்டிக்கொண்ட ஜெர்மன் மக்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏ400எம் என்ற போர் விமானத்தில் தற்போது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, இந்த போர் விமானத்தை மிகவும் அரிதாக மக்கள் பார்வையிட காட்சிப்படுத்துவார்கள். இந்நிலையில் அந்த போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், விமானத்தில் ஏறும் ஆவலோடு அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்த குவிந்துள்ளனர்.

Categories

Tech |