இலங்கையில் ஒரு சில இடங்களில் வானத்திலிருந்து, சிலந்திக்கூடு போன்று ஒரு பொருள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பாறை, தெஹிஅத்தகண்டிய மற்றும் கிராதுருகோட்டை போன்ற பிரதேசங்களில், நேற்று காலை நேரத்தில், சிலந்தி கூடு போல ஏதோ ஒன்று, வானத்திலிருந்து பறந்து வந்தது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது, வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நூல் போல ஒன்று வானத்திலிருந்து பறந்து வந்து தரையில் விழுந்தது.
பகுதி முழுக்க அந்த நூல் படர்ந்தது. ஆனால் வெயில் அதன் மீது பட்டதும் அவை மறைந்துவிட்டது. அனைத்து வாகனங்களிலும் அவை படர்ந்திருந்தது தெரிந்தது. சிறிது நேரம் கழித்து ஒரு விமானம் சென்றது. அதிலிருந்து ஒரு வகையான புகை வெளியேறிக்கொண்டிருந்தது. எனவே, சந்தேகத்தில் காவல்துறையினருக்கும், விமானப்படைக்கும் தகவல் தெரிவித்தோம்.
மேலும், அதனை புகைப்படம் எடுக்க முயன்றோம். ஆனால் அது கேமராவில் தெளிவாக தெரியவில்லை என்று மக்கள் கூறியுள்ளனர்.
.