அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் ஒருவரின் போஸ்டர் பல மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற பதவிக்காக 61-வது வார்டில் அமமுக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாத்திமா பீவி என்ற பெண், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.
இவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால், அந்த போஸ்டரில், “மனைவியை அதிகம் நேசிக்கிறவர்கள் குக்கரை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க” எனவே ஓட்டு போடுங்க! என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது பலரை இந்த போஸ்டர் கவர்ந்திருக்கிறது.