முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் முக கவசம் அணியாமல் காவல்துறையினரிடம் சிக்கிய 5 பேருக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த காணொளியை பகிர்ந்த மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறும் போது, இது தான் படித்த பள்ளியில் கொடுக்கும் பொதுவான தண்டனை என கூறியுள்ளார். இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இது உடல் ரீதியான தண்டனை என்றும், இனி நான் மறந்தும் கூட முகக் கவசம் அணியாமல் வெளியில் செல்ல மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“Face mask rule violators at Marine Drive in Mumbai being made to do a “Murga” walk as punishment by Mumbai Police” Received on my ‘SignalWonderbox.’ A common punishment in the boarding school I attended. Comical, but physically taxing.I certainly won’t forget my mask!! pic.twitter.com/GnVY6NfasV
— anand mahindra (@anandmahindra) March 30, 2021