பிகாரின் ராஜ்கீர் மாவட்டத்தில் குடிக்க வெந்நீர் கேட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி டி.கே. திரிபாதிக்கு, கொதிக்கும் நீரை அங்கு ராணுவ உணவகத்தில் இருந்த வீரர் வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி, அந்தக் கொதிநீரை ஊழியர் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதில் முகம் மற்றும் உடம்பில் பயங்கர தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஊழியர், அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் மருத்துவமனையில் இருந்த அனுப்பப்பட்டார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்வம் குறித்து ஐஜி ரேங்கில் உள்ள சிஆர்பிஎஃப் அலுவலர் ஒருவர் விசாரித்து, அறிக்கை சமர்பித்துள்ளார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட டி.கே. திரிபாதி பிகாரிலிருந்து மனிப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.