வாழ்வாதாரம் பாதித்த 59 பழங்குடினருக்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி தலா 2000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் போக்குவரத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய பழங்குடி இன மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதனை அறிந்த காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படும் 59 பழங்குடி இன குடும்பத்தினருக்கு 2,000 ரூபாய் மதிப்புடைய அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சமூக இடைவெளியை பின்பற்றி காவல்துறையினர் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.