நாடு முழுவதும் டிஜிட்டல் வாயிலான பணபரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2015, 2016ஆம் நிதியாண்டு முதல் 2019, 2020 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வளர்ச்சி விகிதம் நாடு முழுவதும் 55 சதவீதத்தை எட்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 593 கோடியாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 3,434 கோடி ரூபாயைத் தொட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை எட்டப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.