இந்து சமய அறநிலையத் துறையின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யும் பணியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். நேற்று திமுக கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மு க ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யும் பணியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறையின் ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.