டிகோர், டியாகோ ஆகிய 2 வகைகளுக்கான CNG முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் டிகோர், டியாகோ ஆகிய 2 வகையிலும் CNG மாறுபாட்டை விற்பனைக்கு வெளியிடுவதை டீசர் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பிலும், மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலமாக இவை இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp,113Nm டார்க்கை உற்பத்தி செய்துள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனில் 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படலாம். இதுவரை ஹூண்டாய், மாருதி ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் சிஎன்ஜி சந்தையை பெரிதும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் டாடா மோட்டார்ஸ் நுழைவு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதாந்திர கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாட்டா மோட்டார்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றி உள்ளது.