அரசு முறை பயணமாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக வெளிநாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்று அந்த நாடுகளின் வன உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயங்கள் ஆகிவற்றை பார்வையிடடுகிறார்.
அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்தில் அந்த செயல்முறைகளை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் மூலம் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற முடியும் என்றும், அங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை அறிந்து கொண்டு இதனை செய்யலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.