Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

மருத்துவர், செவிலியர் உட்பட….. 42 பேர் வெளியே வர தடை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதுகொரோனா பாதிப்பை கண்டு அஞ்சி நடுங்கி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகிய துறையினர் தங்களது உயிரை பனையம் வைத்து பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்து வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |