Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குவிந்த புகார்கள்…. வேலை செய்ய விடமாட்டுக்காங்க…. ஆட்சியரிடம் சென்ற பெண் ஊராட்சி தலைவர்…!!

பெண் ஊராட்சி தலைவர் பணிகளை செய்ய விடாமல் தன்னை அவதூறாக பேசுவதாக சிலர் மீது ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். ஊரடங்கு காலத்தில் இந்தக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை செலுத்தினார். இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டையின் பெண் ஊராட்சி தலைவர் பவுன் தாய் மற்றும் உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்பொழுது விசாரணையில் ஊராட்சி தலைவரை ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் சிலர் தடுக்கின்றனர். அவரை அவதூராகவும் பேசுகின்றனர். எனவே ஊராட்சி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் சம்பந்தப்பட்டவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் செய்ய வந்துள்ளதாக கூறினார். இதனையடுத்து ஊராட்சித் தலைவரை கலெக்டரிடம் சென்று மனுவை கொடுக்கும்படி கூறினர் காவல்துறையினர்.

பூச்சி நாயக்கன் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு பெட்டியில் ஒரு புகாரை செலுத்தினர். அதில், பள்ளப்பட்டி கிராமம் சிங்களத்துக்கு அருகே உள்ள சந்தன கருப்பசாமி கோவிலில் பூசாரியை மிரட்டி அங்குள்ள உண்டியலை சிலர் எடுத்துச் சென்றதாகவும், இதுகுறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

எஸ்டிபிஐ கட்சியினரும் புகார் பெட்டியில் மனுவை செலுத்தியிருந்தனர். அதில், பள்ளபட்டி ஊராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் சாக்கடை அமைப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டது. இரண்டு மாதங்களாகியும் அது மூடப்படாமல் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

சட்ட நீதி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், தொழில் வணிகத்துறை தலைமையில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கு கடிதம் வழங்கப்படுவதாகவும் அந்த கடிதத்தை கொண்டு சென்றால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் யாரும் தருவதில்லை எனவும், இந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியரே தீர்வு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Categories

Tech |