ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவைத்தூரில் வசிப்பவர் வினோத். இவருடைய மகனின் பெயர் நவீன். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் நவீன் கலந்துகொண்டார். அதனுடைய முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மாணவன் நவீன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் வருகிற ஜூன் மாதம் 30-ஆம் தேதி உலக அளவில் இணையதளம் மூலம் நடைபெறும் கையெழுத்து போட்டியில் பங்கேற்கவும் மாணவன் நவீன் தகுதி பெற்றுள்ளார் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.