வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கன்னிவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.