மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது யாருடை வாகனம் என்று விசாரித்து வருகிறார்கள்.