திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து கிருபானந்தன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.